written by:
Dr. M.H.M. Nazeem, Senior Lecturer, University of Colombo, Unani Section
BUMS (Hons) MPhil Unani (Colombo), EMA (Ceylon Medical College Council)

Note: There will be delay in replying to your question
குறிப்பு: இப்பகுதியில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு டாக்டர்களின் பதில் அளிப்பதில் தாமதமாகலாம்.



மாதவிடாயச் சக்கரத் தொழிற்பாடு நிற்பது என்பது Post menoposal Syndrome எனக் கூறப்படும். எல்லாப் பெண்களும் ஏறக்குறைய 50 வயதைத் தாண்டும் போது ஏற்படுகின்ற ஒரு நிகழ்வு என்பதனால் இதை ஒரு நோயாகக் கருதுவது இல்லை . இது பெண் இனப்பெருக்கத் தொகுதியின் ஒரு பகுதியான சூலகத்தின் தொழிற்பாடு கிட்டத்தட்ட 35 வயதிலிருந்தே படிப்படியாகக் குறைந்து 50 வயதையடையும் போது நிரந்தரமாக தொழிற்படாமல் இருப்பதையே குறிக்கும். இதற்குக் காரணம் சூலகத்திலிருந்து உற்பத்தியாகும் சில ஹோர்மோன்கள் படிப்படியாக குறைந்து கருக்கட்டுவதற்குத் தேவையான முட்டை உருவாகுவதை நிறுத்திக் கொள்வதால் ஆகும்.

எமது உடம்பில் சூலகத்தைத் தவிர ஏனைய சகல உறுப்புகளும் வயது கூடும் போது அதன் தொழிற்பாடுகள் படிப்படியாகக் குறைந்தாலும் உயிர் வாழும் வரை தொழிற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் சூலகம் மாத்திரம் தான் அதன் தொழிற்பாட்டை உயிர்வாழும் போதே நிறுத்திக் கொள்கின்றன.

பெண்களின் வயது கூடும் போது கர்ப்பிணியாகுவது என்பது ஒரு கஷ்டமான நிலையை உருவாக்கும். எனவே மாத விடாய் நிரந்தரமாக நிறுத்தப்படுவது என்பது இறைவனால் பெண்களுக்கு அருளப்பட்ட ஒரு நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாடு என்றே கூறலாம்.

சூலகத்தினால் உருவாக்கப்படும் ஹோர் மோன்களில் ஈஸ்ரஜன் என்பது மிக முக்கியமானதொன்றாகும். இது இனப்பெருக்கத் தொகுதியில் மாத்திரம் அன்றி உடம்பின் பல உறுப்புகளின் தொழிற்பாட்டுக்குத் தேவையான ஈஸ்ரஜனின் உற்பத்தி மிகவும் குறையும் போது தான் நிரந்தரமாக மாத விடாய் வராமல் போகின்றது. இக் கட்டத்தில்தான் உடம்பில் சகல உறுப்புகளினதும் தொழிற்பாடுகளும் பலவீனமடைகின்றன.

இதன் காரணமாக உடம்புச் சோர்வு, தூக்கமின்மை , மூட்டு வலி, இரவில் வியர்வை , தலைமுடி உதிர்தல், சிறுநீர் அடிக்கடி வெளியேறுதல், தோல் சுருக்கம், கால் வீக்கம், கைகால் குளிர்தல், தலை யிடி, நெஞ்சு படபடப்பு, கிரகிக்கும் சக்தி குறைதல், மன அமைதியின்மை , உடம்பு சூடாகும் போன்ற உணர்வு உட்பட பல குறி குணங்கள் தோன்றும். இதே நிலை தொடர்ந்து இருந்தால் ஒரு சிலருக்கு இருதய நோய்கள் போன்ற பாரதூரமான நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

ஆனாலும் மேற்குறிப்பிட்ட நோய்க் குறி குணங்கள் எல்லோரிலும் ஏற்படுவது இல்லை. ஒரு சிலருக்கு மாதவிடாய் நிரந்தரமாய் நின்றதன் பின்பு எதுவிதமான மேற் கூறிய குறி குணங்களும் காணப்படாது. அனேகமானோருக்கு மேற்கூறியவற்றில் ஒரு சில நோய்க் குறி குணங்களே காணப்படும். ஆனால் மற்றும் ஒரு சிலருக்கு மேற்குறிப்பிட்டவற்றில் பல நோய்க் குறி குணங்கள் ஏற்பட்டு அவதியுற்றுக் கொண் டிருப்பார்கள்.

எனவே இந்நிலை வராமல் தடுப்பதே (மேல். எனவே ஒருவர் 35 வயதைத் தாண்டும் போதே போசாக்கு மிக்க உணவுகளான தானிய வகைகள், மரக்கறி வகைகள், தவிடுடன் கூடிய அரிசி, வெள்ளை மீன் வகைகள், கீரை வகைகள், பழ வகைகள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் ஒரு நாளைக்கு 15 நிமிடங்களாவது அதிகாலை வெய்யில் படும்படியாக இருக்க வேண்டும். மேலும் உடற் பருமனையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தினமும் போதியளவு உடற்ப யிற்சி, மன அழுத்தமற்ற வாழ்க்கை போன்றவையும் மிக மிக முக்கியமானதாகும்.

நவீன வைத்தியத்துறையைப் பொறுத்த வரையில் விட்டமின்களும் மற்றும் HRT எனப்படும் ஹோர்மோனை ஈடு செய்யக் கூடிய சிகிச்சையும் கொடுக்கப்படுகின்றன. ஆனால் HRT சிகிச்சை மூலம் பல பக்க விளைவுகள் ஏற்படுவதால் அதிக தீவிரத் தன்மையுடையவர்களுக்கு மாத்திரமே இச் சிகிச்சையைக் கொடுக்கிறார்கள். அத்துடன் நோயின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப வேறு பல சிகிச்சை முறைகளும் கையாளப்படு கின்றன.

யூனானி வைத்திய முறைப்படி பல கோணங்களில் இதற்கான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோயாளியின் நோய் நிலைக்கு ஏற்ப மருத்துவக் குணமுள்ள உணவுகள் சிபார்சு செய்யப்படுகின்றன. அத்துடன் மருத்துவக் குண முள்ள வெளிப்பூச்சு மருந்துகளைப் பூசி அதிகாலை வெய்யில் படும்படி இருக்க வேண்டப்படுவார்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள படி நோய்க்குறி குணங்கள் ஒருவக்கு ஒருவர் வித்தியாசப்படும். எனவே சிகிச்சையளிக்கும் போது ஒவ்வொருவரினதும் நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்துகளும் வித்தியாசப்படும். எனவே யுனானி வைத் திய முறையில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நோய்க் குறி குணங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் உள்ளன.

இந்நோய் நிலைக்குச் சிகிச்சையளிக்கும் போது மனநல ஆலோசகர்களது சிகிச்சையும் அத்தியாவசியமானதொன்றாகும் மனநலப் பாதிப்பும் இந்நிலைக்குச் சிகிச்சையளிப்பதற்கு ஒரு தடையாக இருக்கின்றன. இதன் போது மாதவிடாய் நின்றதன் பின்னான தனது வாழ்க்கையை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பதைப்பற்றி அறிவுறுத்தப்படுவார்கள்.

ஆகவே ஒவ்வொரு பெண்மணியும் தான் 35 வயதைத் தாண்டியதிலிருந்து போஸ்ட் மெனோ போசல் சின்றோம் வராமல் இருப்பதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இந்நோய்க்குள்ளானவர்கள் இதன் மூலம் இருதயக் கோளாறுகள் ஒஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) போன்ற இலகுவில் சிகிச்சையளிக்க முடியாத நோய்கள் வருவதிலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்குரிய வைத்திய ஆலோசனைகளையும் சிகிச் சையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு செய்தியாக நீங்கள் எதிர்காலத்தில் மேற் கூறப்பட்ட நோய் நிலைகளில் இருந்து உங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் இயற்கை உணவுகளை உண்டு போதியளவு உடற்பயிற்சியையும் செய்து எதிர்காலத்தில் உங்களது வயோதிப வாழ்க்கையை திடகாத்திரமாக்க தயாராகும்படி வேண்டுகிறேன்.